உயர்நிலைப் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யும் போது, தமிழாசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசு பரிசீலனை செய்து வருகிறது.
உயர்நிலைப் பள்ளிகளில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம், பணி நியமனம் செய்யப்பட்டு வருகிறது. 160 மாணவர்கள் இருந்தால், ஐந்து ஆசிரியர்கள் இருப்பார்கள். 160 க்கு மேல் மாணவர்கள் இருக்கும் போது, கூடுதலாக ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய வேண்டும்.
அப்படி பணி நியமனம் செய்யும் பட்சத்தில், முதலில் தமிழாசிரியர்கள், இரண்டாவதாக கணித ஆசிரியர், மூன்றாவதாக அறிவியல் ஆசிரியர், நான்காவதாக சமூக அறிவில் ஆசிரியர், ஐந்தாவது ஆங்கில ஆசிரியர் என்ற வரிசைப்படி, பணி நியமனம் செய்ய, அரசு பரிசீலனை செய்து வருகிறது.
முன்பு, தமிழாசிரியர்கள் நியமனமானது, ஐந்தாவது நிலையில் இருந்தது. தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. இதை மாற்றி, முதல் இடத்திற்கு கொண்டு வர, அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் கூடுதல் ஆசிரியர்கள் பணி நியமனம் வரவிருப்பதால், தமிழாசிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக