லேபிள்கள்

20.7.13

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு


தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு (TNGTF)
இடம்; BELL MONKEY RESTRURENT, குற்றாலம்,               நாள்; 13.07.2013

                                              மாநில செயற்குழு தீர்மானங்கள்

1.   அனைத்து ஆசிரியர் சங்கங்களின் குறைகளை  கேட்டு அதனை நிறைவேற்றிட ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டம் கூட்ட உத்தரவு பிறப்பித்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு  இந்த மாநில செயற்குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 


2.   அனைத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டத்தை முறைப்படி கூட்ட வழிவகை செய்து அனைத்து ஆசிரியர் சங்கங்களின் குறைகளை  கேட்டறிந்த மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களுக்கும், பள்ளிக்கல்வி செயலர் அவர்களுக்கும், அனைத்து இயக்குநர்களுக்கும் இக்கூட்டம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

3.   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் நீண்ட நாள் கோரிக்கையான M.phil பட்டத்திற்கான ஊக்க ஊதியம் வழங்க ஆணை வெளியிட்ட மாண்புமிகு  தமிழக முதல்வர் அவர்களுக்கு  இந்த மாநில செயற்குழு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

4.   மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்  தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக அறிவிக்க உள்ளதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தார்கள். அந்த வாக்குறுதியினை நிறைவேற்றி பணிமுறிவுகாலமாக உள்ள அப்பணிக்காலத்தை பணிக்காலமாக மாற்றி ஆணையிட இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

 

5.   அனைத்து ஆசிரியர்களின் வாழ்வாதரத்தை அடியோடு பாதிக்கும் பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை இரத்து செய்து பழைய ஒய்வூதிய திட்டத்தினை அமல்படுத்திட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

 

6.   தமிழக பள்ளிகளில் டி.ஆர்.பி மூலம் பணிநியமனம் செய்யப்பட்டு தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றி வரும் பட்டதாரி ஆசியர்களுக்கும் டி.ஆர்.பி தரவரிசை எண் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வினை வழங்கிட  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

7.   தமிழக பள்ளிகளில் டி.ஆர்.பி மூலம் பணிநியமனம் செய்யப்பட்டு நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெறுவதற்கு ஆணையிட இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

8.   இலவசப் பொருட்கள் பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்படும்போது ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவதை தவிர்க்க  அரசு தக்க நடவடிக்கை மேற்கொள்ள  இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

9.   ஆசிரியர் தகுதி தேர்வில் இனவாரியான இட ஒதுக்கீடு மேற்கொள்ள தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

10.  உதவித் தொடக்க க் கல்வி அலுவலர்களுக்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பதவி உயர்வு வழங்கிய ஆணையினை செயல்படுத்த தமிழக அரசை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக