லேபிள்கள்

19.10.13

பள்ளி மாணவ–மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிக்கு ரூ.10 கோடி நிதி - தமிழக முதல்வர் உத்தரவு

மாணவ, மாணவியர் இடையே, விளையாட்டுப் ஆர்வத்தை அதிகரிக்க, விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்காக, முதல்வர் ஜெயலலிதா, 10 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்.
முதன்முறையாக, குறுவட்ட அளவில் போட்டிகள் நடத்த, 2.64 கோடி; கல்வி மாவட்ட அளவில், போட்டிகள் நடத்த, 79.83 லட்சம்; மண்டல அளவிலான, பழைய விளையாட்டுப் போட்டிகளை நடத்த, 1.29 கோடி; மண்டல அளவில், புதிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த, 1.45 கோடி; மாநில அளவில், குடியரசு தின மற்றும் பாரதியார் தின குழுப் போட்டிகள் நடத்த, 94.33 லட்சம்; மாநில அளவில், குடியரசு தின தடகளப் போட்டிகள் நடத்த, 26.17 லட்சம்; பாரதியார் தின மற்றும் குடியரசு தினம் புதிய விளையாட்டுப் போட்டிகள் நடத்த, 81.13 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியப் பள்ளிகளுக்கான, விளையாட்டுக் குழுமம் நடத்தும், தேசிய அளவிலான, போட்டிகளுக்கான தேர்வு போட்டிகள், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்றல், தேசிய போட்டிகளை நடத்துதல், ஆகியவற்றுக்காக, 1.79 கோடி ரூபாய் என, மொத்தம் 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக