தனியார் நிறுவனம் நடத்தும் நடைபயண நிகழ்ச்சிகளில், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை' என, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த, 'டான்' அறக்கட்டளை என்ற தனியார் நிறுவனம், 'பசுமை மற்றும் துாய்மை' என்ற தலைப்பில், பள்ளி மாணவர்களை கொண்டு, 14 மாவட்டங்களில் நடைபயணம் நடத்த, பள்ளிக்கல்வி துறையில் அனுமதி கேட்டுஉள்ளது.
இதையடுத்து, மதுரை, ராமநாதபுரம், சேலம், திண்டுக்கல், தேனி, துாத்துக்குடி, கடலுார், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், சென்னை, தஞ்சாவூர், நாகை மற்றும் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.அதில், 'டான் அறக்கட்டளைநடத்தும் நிகழ்ச்சியில், அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்கள், எந்த காரணம் கொண்டும் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது' என, தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக