சென்னை: பிளஸ் 2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, தனித்தேர்வர்களுக்கு, ஆறு நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 துணைத்தேர்வு, அக்டோபரில் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு தேதியை, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி அறிவித்துள்ளார். தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள,
அரசு தேர்வுத் துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று, இன்று முதல் வரும், 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நாளை கிருஷ்ண ஜெயந்தி மற்றும், 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், இந்த நாட்களில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படாது. இதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஆறு நாட்கள் அவகாசம் தரப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக