மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள தமிழகத்தில் 100 பயிற்சி மையங்கள் அமைய உள்ள இடங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
நீட், ஜே.இ.இ., ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நீட், ஜே.இ.இ., ஐ.ஐ.டி. போன்ற மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ–மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் மொத்தம் 412 மையங்களில் இந்த சிறப்பு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக அடுத்த மாதத்துக்குள் 100 பயிற்சி மையங்களை தொடங்க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைய உள்ள இடங்கள் எவை? என்பது குறித்த பட்டியல் நேற்று வெளியானது. அதில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் காஞ்சீபுரத்தில் 4 இடங்களிலும், திருவள்ளூரில் 5 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களில் இந்த பயிற்சி மையங்கள் அமைய இருக்கின்றன.
சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் தலா 3 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் இடங்கள் வருமாறு;–
* அரசு மேல்நிலைப்பள்ளி, எம்.ஜி.ஆர். நகர், சென்னை–78
* செயின்ட் ஜோசப் மகளிர் மேல்நிலைப்பள்ளி, சூளை, சென்னை–112
* டாக்டர் கே.கே.நிர்மலா மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர், சென்னை–83
* அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி, சேலையூர்–600078
* எஸ்.எஸ்.கே.வி. (மகளிர்) அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி, காஞ்சீபுரம்–631502
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, நந்திவரம்–603202
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செய்யூர்–603302
* அரசு மேல்நிலைப்பள்ளி, அத்திமஞ்சேரிப்பேட்டை–631202
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, காமராஜ நகர், ஆவடி–600071
* அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி–601204
* பி.கே. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர்–600053
* அரசு மேல்நிலைப்பள்ளி, சோழவரம்
இதுகுறித்து பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
மத்திய அரசு நடத்தும் போட்டி தேர்வுகளை மாணவ–மாணவிகள் எதிர்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக 100 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஸ்பீடு நிறுவனத்துடன் இணைந்து மாணவ–மாணவிகளுக்கு இந்த பயிற்சி வகுப்புகளை நடத்த இருக்கிறோம். அடுத்த மாதத்துக்குள்(நவம்பர்) இந்த பயிற்சி மையங்களில் வகுப்புகள் தொடங்கப்படும். அதற்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம்.
பிளஸ்–2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு பயிற்சி அளிக்க திட்டமிட்டு உள்ளோம். அடுத்த ஆண்டு முதல் பிளஸ்–1 மாணவர்களும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். வார விடுமுறை நாட்களில் இந்த பயிற்சி மையங்களில் வகுப்புகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் வகுப்புகள் 3 முதல் 5 மணி நேரம் வரை நடக்கும்.
பயிற்சி மையம் அமைந்துள்ள இடங்களுக்கு மாணவ–மாணவிகள் வருவதற்கு ஏதுவாக தான் பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்கள் முழு ஈடுபாட்டுடன் இந்த பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு மத்திய அரசு நடத்தும் எந்த போட்டி தேர்வானாலும் எளிதில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக