லேபிள்கள்

22.10.17

மலைப்பகுதி மாணவியருக்கு 'சல்வார் கமீஸ்' சீருடை

வரும் கல்வியாண்டு முதல், புதிய வண்ணத்தில் சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மலைப்பகுதி மாணவியருக்கு, 'சல்வார் கமீஸ்' வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளின் மாணவ - மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களுக்கு, அரைக்கை சட்டை மற்றும் பேன்ட்; மாணவியருக்கு, சுடிதார் வழங்கப்படுகிறது.வரும் கல்வியாண்டு முதல், சீருடையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை, ஒரு வகை சீருடையும்; 6 முதல் 8ம் வகுப்பு வரை ஒரு வகையும்; 9 முதல், பிளஸ் ௨ வரை மற்றொரு வகை என, தனித்தனி சீருடைகள் வழங்கப்பட உள்ளன.

மலைப்பகுதி மாணவர்களுக்கு, சீருடை மாற்றப்படுகிறது. குளிரிலிருந்து தப்பிக்க, மாணவர்களுக்கு முழுக்கை சட்டை, பேன்ட்; மாணவியருக்கு, சல்வார் கமீஸ் உடையும், அதற்கு மேல் சட்டையும் வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான வடிவமைப்பு பணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக