லேபிள்கள்

20.10.17

பள்ளிகள் இன்று திறப்பு : பாடம் நடப்பது, 'டவுட்'

தீபாவளி விடுமுறையை சரிகட்ட, சனிக்கிழமைகளில் பள்ளிகளை நடத்த, அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தீபாவளி பண்டிகை முன்னிட்டு, நேற்றும், நேற்று முன்தினமும், பள்ளி, கல்லுாரிகளில் விடுமுறை
அறிவிக்கப்பட்டது. ஆனால், தீபாவளியை கொண்டாட, வெளியூர்களுக்கு சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள் பலர், இன்னும் ஊர் திரும்பவில்லை. அதனால், இன்று பள்ளிகள் திறந்தாலும், பாடம் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், நாளையும், நாளை மறுநாளும், சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், ஏராளமான ஆசிரியர்கள், இன்று விடுப்பு போட்டுள்ளனர். எனவே, அந்த ஆசிரியர்கள், விடுபட்ட பாடங்களை நடத்த வசதியாக, அடுத்து வாரம் முதல், சனிக்கிழமைகளில், கூடுதல் வகுப்புகள் நடத்த வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக