"குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்துகொள்ளலாம்' என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு: வரும், 25ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. 5,566 பணியிடங்களை நிரப்ப நடக்கும் இத்தேர்வை எழுத, 17 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு கட்டணத்தை செலுத்திய விண்ணப்பத்தாரர்களின் விவரங்கள், www.tnpsc.gov.in என்ற தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது பதிவு எண்களை பதிவு செய்து, இணையதளத்தில் உள்ள விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்.
அனைத்தையும் சரியாக செய்தும், உரிய விவரங்கள், இணைய தளத்தில் இல்லா விட்டால், contacttnpsc@gmail.com என்ற "இ-மெயில்' முகவரிக்கு, தகவல் தெரிவிக்கலாம். மெயிலில், பெயர், பதிவு எண், விண்ணப்ப, தேர்வுக்கட்டணம் விவரம், கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம்/இந்தியன் வங்கி), அதன் முகவரி போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். தகுதியான விண்ணப்பத்தாரர்கள், "ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்வது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக