லேபிள்கள்

8.8.13

அகவிலைப்படி கணக்கீடு எப்படி!

ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் அரசு அறிவிக்கும் அகவிலைப்படி கணிசமான தொகையாக கிடைக்கிறது. இதை நிர்ணயிப்பதற்கென ஒரு பார்முலா உள்ளது. அதனடிப்படையில் கணக்கிட்டு 6 மாதங்களுக்கு ஒருமுறை அடிப்படை சம்பளம் வழங்குகின்றனர்.


கடந்த 12 மாதத்தில், தேசிய அளவிலான நுகர்வோர் விலைப்புள்ளியின் சராசரியை கணக்கிட்டு, அதில் 115.76 என்ற நிர்ணயிக்கப்பட்ட ஒரு எண்ணை கழிக்கின்றனர். அதில் கிடைக்கும் எண்ணை 100 ஆல் பெருக்குவர்.

அத்தொகையை மீண்டும் 115.76ஆல் வகுப்பர். இதையே, அகவிலை படியாக கணக்கிடுகின்றனர். உதாரணமாக கடந்த 12 மாதங்களின் சராசரி வருமாறு: நுகர்வோர் விலைப்புள்ளி 2012, ஜூலையில்-212, ஆக.,214, செப்., 215, அக்.,217, நவ., 218, டிச.,219, பின் 2013 ஜன., 221, பிப்., 223, மார்ச் 224, ஏப்., 226, மே 228, ஜூன் 231. இவற்றின் கூட்டுத்தொகை 2648. இதன் 12 மாத சராசரி 220.75. இதில் இருந்து 115.76 கழித்தால், கிடைப்பது 104.99. இதை 100ல் பெருக்க கிடைப்பது 10,0499. இத்தொகையை மீண்டும் 115.76ஆல் கழித்தால் கிடைப்பது 90.69.

இந்நிலையில் ஏற்கனவே 80 சதவீத அடிப்படை சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக வழங்கி, மேற்கண்ட 90 சதவீதத்தை எட்டும்படி செய்வர். இதுவே அகவிலைப்படி கணக்கிடும் முறை
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக