குற்ற வழக்கில் கீழ்கோர்ட்டில் விதிக்கப்பட்ட
தண்டனை அடிப்படையில்
டிஸ்மிஸ் செய்யப்பட்ட
ஆசிரியர் ஐகோர்ட்டால்
விடுதலை செய்யப்பட்டதால் பணியில் இல்லாத காலத்துக்கும் பணப்பலன் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் பட்டுக்கோட்டையை சேர்ந்த மதிராஜன், ஐகோர்ட் கிளை யில் தாக்கல் செய்த மனு:அரசு மேல் நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணிபுரிகிறேன். என் மீது வட்டாத்திகோட்டை போலீசார்
1999ம் ஆண்டு குற்ற வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில்
கீழ்கோர்ட் எனக்கு தண்டனை வழங்கியது. கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்றதால்,
என்னை பணியில் இருந்து நீக்கி 2001ம் ஆண்டு மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
இதற்கிடையே
கடந்த 2008ம் ஆண்டு கீழ்கோர்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டு, வழக்கிலிருந்து ஐகோர்ட்டால் நான் விடுதலை செய்யப்பட்டேன். இதை தொடர்ந்து, 2009ம் ஆண்டு என்னை மீண்டும் பணியில் சேர்த்தனர். இருப்பினும் 2001 முதல் 2009 வரை பணியில் இல்லாமல்
இருந்த காலத்தில்,
எந்த வேலையும்
செய்யாததால் சம்பளம் மற்றும் பணப்பலன்களை வழங்க முடியாது என அதிகாரிகள்
கூறிவிட்டனர். பணியில் இல்லாத காலத்திற்கான சம்பளம் மற்றும் பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.மனுவை நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன்
விசாரித்து அளித்த தீர்ப்பு:மனுதாரரை குற்ற வழக்கில் இருந்து ஐகோர்ட் விடுதலை செய்துள்ளது.
வழக்கில்
இருந்து ஒருவர் விடுதலை செய்யப்படும் போது அவருக்கும் குற்றத்திற்கும் தொடர்பு இல்லை என்றுதான் அர்த்தம்.
மனுதாரர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர் மீதான புகாரை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமிக்கவில்லை. கீழ்கோர்ட்
தண்டனை வழங்கியதால்
மட்டுமே பணியில் இருந்து நீக்கியுள்ளனர். குற்ற வழக்கு தொடர்பாக துறைரீதியான
நடவடிக்கை ஏதும் எடுக்காதபட்சத்தில் சம்பந்தப்பட்ட
ஊழியர் பணியில் இல்லாமல் இருந்த காலத்திற்கு
உரிய பணப்பலன்களை
பெற தகுதி உடையவர். எனவே, மனுதாரருக்கு
அவர் பணியில் இல்லாமல் இருந்த காலத்திற்குரிய பணப்பலன்களை 3 மாதத்தில்
வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக