சென்னை:பள்ளிக்கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்களின், டிரான்ஸ்பர் திரும்ப
பெறப்பட்டு உள்ளது. ஒருவர் மட்டும், வேறு பணியிடத்திற்கு, மீண்டும்
மாற்றப்பட்டார்.ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர், சேதுராம வர்மா, மெட்ரிக் பள்ளிகள் இணை
இயக்குனராக,
கடந்த, 12ம் தேதி மாற்றப்பட்டார்.
மெட்ரிக் பள்ளிகள் இணை இயக்குனர், கார்மேகம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில்
உறுப்பினராக மாற்றப்பட்டார். தற்போது, இந்த மாற்றங்கள், வாபஸ் பெறப்பட்டு உள்ளன.
ஏற்கனவே இருந்த இடங்களில், இருவரும் தொடர்ந்து பணியாற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல்,டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக இருந்த உமா, தேர்வுத் துறை இணை இயக்குனராக
மாற்றப்பட்டிருந்தார். இவரின் பணியிட மாறுதலும் ரத்து செய்யப்பட்டு, தொடர்ந்து, டி.ஆர்.பி.,யில் பணியாற்ற,நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. வர்மா மற்றும்
உமா இருவரும், டி.ஆர்.பி.,யில் நல்ல அனுபவம் பெற்றிருப்பதால்,அவர்களை, தொடர்ந்து டி.ஆர்.பி., பணியில் பயன்படுத்திக்
கொள்வதற்காக, இந்நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டி.ஆர்.பி.,யில் உறுப்பினராக
நியமிக்கப்பட்ட ராமராஜ், தற்போது, தேர்வுத் துறை இணை இயக்குனராக
மாற்றப்பட்டு உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக