லேபிள்கள்

6.9.13

சிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.

சிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
ஆசிரியர் தினவிழாவில் விருது
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி பள்ளியில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் .சபீதா தலைமை தாங்கினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்துகொண்டு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கினார்.

அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன், அனைவருக்கும் இடை நிலைக்கல்வி இயக்குனர் .சங்கர், ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் .அறிவொளி, இணை இயக்குனர்கள் கருப்பசாமி, கார்மேகம், உஷாராணி, பூ.. நரேஷ், லதா, பழனிச்சாமி உள்படபலர் கலந்துகொண்டனர்.
சென்னை முதன்மை கல்வி அதிகாரி டி.ராஜேந்திரன் விழா ஏற்பாடுகளை உடன் இருந்து கவனித்தார். தொடக்கத்தில் பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வரவேற்றார். தொடக்க கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக