லேபிள்கள்

4.9.13

ஒரு கோடி மாணவர்களின் விவரங்கள் இணையதளத்தில் விரைவில் வெளியீடு

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் ஒரு மாதத்துக்குள் இணையதளத்தில் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.


தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள், பள்ளிகள், மாணவர்களின் விவரங்கள் கல்வித் தகவல் சார்ந்த மேலாண் முறைமைக்காக(உஙஐந - உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்ஹப் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் ஐய்ச்ர்ழ்ம்ஹற்ண்ர்ய் நஹ்ள்ற்ங்ம்) திரட்டப்பட்டது.

இதற்காக 55 ஆயிரம் பள்ளிகள், 5.5 லட்சம் ஆசிரியர்கள், 1.33 கோடி மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த விவரங்களைத் தேடும் வகையில் சாப்ட்வேரை அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. இந்த சாப்ட்வேர் தயாரானதும், பரிசோதித்துப் பார்க்கப்படும். அதன்பிறகு, இந்தத் தகவல்கள் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.

பள்ளிகள் தொடர்பான விவரங்களில் பள்ளி திறக்கப்பட்ட தேதி, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, வகுப்பறைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மாணவர் தொடர்பான விவரங்களில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன.
நன்றி : தினமணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக