சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக்கல்வி வாரியம்), சென்னை மண்டல அளவிலான பிளஸ் 2 தேர்வு முடிவை, நேற்று வெளியிட்டது. சென்னை மாணவர், அக் ஷய் அரவிந்த், 500க்கு, 493 மதிப்பெண் பெற்று, சாதனை படைத்தார். 45,064 மாணவர்கள் மார்ச்சில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு நடந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் சில யூனியன்
பிரதேசங்கள் அடங்கிய சென்னை மண்டலத்தில், 45,064 மாணவர்கள், தேர்வை எழுதினர். தமிழகத்தில் மட்டும், 10 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவு, சி.பி.எஸ்.இ., இணைய தளத்தில் (www.cbseresults.nic.in) நேற்று வெளியானது. சி.பி.எஸ்.இ., 'ரேங்க்' பட்டியலை வெளியிடுவதில்லை.
எனினும், தமிழக அளவில், சென்னை, நுங்கம்பாக்கம், பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர், அக் ஷய் அரவிந்த், 500க்கு, 493 மதிப்பெண் பெற்றதே, அதிகபட்சமாகக் கருதப்படுகிறது.
கணிதத்தில், 100க்கு, 100 இவர், கணிதத்தில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றார். இயற்பியல், ஆங்கிலம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய, மூன்று பாடங்களிலும், தலா, 98 மதிப்பெண் மற்றும் வேதியியலில், 99 மதிப்பெண்ணும் பெற்றார். அக் ஷய் கூறுகையில், ''பி.இ., மெக்கானிக்கல் அல்லது சிவில் படிக்க ஆர்வமாக உள்ளேன். கடினமாக உழைத்தால், அதிக மதிப்பெண் பெறலாம். நான், பள்ளி வேலை நாட்களில், தினமும், 4 மணி நேரமும், விடுமுறை நாட்களில், தினமும், 8 மணி நேரமும் படிப்பேன்,'' என்றார். இவரது பெற்றோர் இருவருமே, சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனையில், டாக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னை, கோபாலபுரம், டி.ஏ.வி., பெண்கள் பள்ளி மாணவி, பர்சானா, 490 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், மருத்துவம் படிக்க உள்ளதாக தெரிவித்தார். அதே பள்ளியில், வணிகவியல் பிரிவில், 489 மதிப்பெண் பெற்ற சித்ரா, சி.ஏ., படிக்க ஆர்வம் உள்ளதாக தெரிவித்தார்.
தேர்ச்சி சதவீத விவரம் தேர்வு முடிவு குறித்து, சி.பி.எஸ்.இ., சென்னை மண்டல அலுவலர், சுதர்சன் ராவிடம் கேட்டபோது, ''சென்னை மண்டல அளவிலான தேர்ச்சி சதவீத விவரம், நாளை (இன்று) கிடைக்கும். மண்டல அளவிலான தேர்வு முடிவை மட்டும், மாணவர்கள், இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக