பி.இ., படிப்பிற்கு விண்ணப்பம் பெறவும், பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், இன்று கடைசி நாள். நேற்று வரை, 1.2 லட்சம் விண்ணப்பங்கள், அண்ணா பல்கலையில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. பி.இ., - பி.டெக்., படிப்புகளில் சேர, கடந்த, 3ம் தேதியில் இருந்து, விண்ணப்பம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, கடந்த, 20ம் தேதி, கடைசி நாளாக முதலில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. பின், இன்று வரை நீட்டிக்கப்பட்டது. இதுகுறித்து, பி.இ., சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது:
நேற்று மாலை வரை, 2.10 லட்சம் விண்ணப்பங்கள், விற்றுள்ளன. 1.2 லட்சம் விண்ணப்பங்கள், பூர்த்தி செய்த நிலையில் பெறப்பட்டுள்ளன. இன்று மாலை வரை, விண்ணப்பம் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, இன்று மாலை, 6:00 மணி வரை சமர்ப்பிக்கலாம். இவ்வாறு, ரைமண்ட் தெரிவித்தார். நேற்று, 700 விண்ணப்பம் விற்பனை ஆனது. கடைசி நாளான இன்று, 500 முதல், 1,000 விண்ணப்பம் வரை, விற்பனை ஆகலாம் எனவும், பெறப்படும் மொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை, 1.4 லட்சமாக உயரும் எனவும், எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக