லேபிள்கள்

19.6.15

மருத்துவ படிப்பு கலந்தாய்வு இன்று துவக்கம் : ஜூன் 25 வரை நடைபெறுகிறது.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில், மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவங்குகிறது. இதற்காக, விசேஷ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


முதல் நாளான இன்று, சிறப்பு பிரிவினர் கலந்தாய்வு; 
நாளை முதல், பொது பிரிவினர் கலந்தாய்வு நடக்கிறது.கலந்தாய்வுக்காக, கூட்ட அரங்கிலும், வெளியேயும், 12 எல்.இ.டி., திரைகள்; தற்காலிக வங்கி வசதி, ஒரே நேரத்தில், ஐந்து மாணவர் அமர்ந்து, கல்லூரிகள் தேர்வு செய்யும் வகையில், ஐந்து கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. பெற்றோர், மாணவர்கள் வெளியே அமர நிழற்கூடம்; அங்கு, நான்கு எல்.இ.டி., திரைகள்; குடிநீர், கழிப்பறை வசதி, சிற்றுண்டியகம் அமைக்கப்பட்டுள்ளன. 


வரும், 25ம் தேதி வரை, கலந்தாய்வு நடக்கிறது.மாணவர்கள் ஒரு மணி நேரம் முன், அரங்குக்குள் இருக்க வேண்டும்; மறுகூட்டல், மறுமதிப்பீடு மதிப்பெண் பெற்றவர்கள், அதற்கான சான்றை எடுத்து வர வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?
*அரசு மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, கல்விக் கட்டணம், 4,000 ரூபாயுடன், ஆண்டுக் கட்டணம், 13,600 ரூபாய்.
* பி.டி.எஸ்., படிப்புக்கான கல்விக் கட்டணம், 2,000 ரூபாயுடன், ஆண்டுக்கு, 11,600 ரூபாய் கட்டணம்.
* சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு, எம்.பி.பி.எஸ்., இடத்திற்கு, 2.50 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரையும்; பி.டி.எஸ்., படிப்புக்கு, 1.30 லட்சம் ரூபாயும் கட்டணம்நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக