அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை என கூறும் கல்வித் துறையின் கீழ்இயங்கும் அரசு ஆரம்பப் பள்ளிகளில், எட்டு மாணவர்களுக்கு, இரு ஆசிரியர் உட்பட நான்கு ஊழியர்கள் பணியாற்றும் கூத்து புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது. புதுச்சேரியில் 161 அரசு ஆரம்பப் பள்ளிகள் உள்ளன.
காரைக்கால்65, மாகி 10, ஏனாம் 15 என மொத்தம் 251 ஆரம்பப் பள்ளிகள் உள்ளன.
குறையும் சேர்க்கை:
கல்விக்காக மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபாய்ஒதுக்கி, இலவச பாட புத்தகம், சீருடை, காலணி, மதிய உணவு, காலை சிற்றுண்டி என பல நலத்திட்டங்களை செயல்படுத்தினாலும், ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைகிறது. ஆங்கில மோகம் காரணமாக தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனால் அரசு பள்ளிகளிலும், ஆங்கில வழி கல்வி கொண்டு வரப்பட்டது. கடந்த ஆண்டு சி.பி.எஸ்.சி. பாட திட்டம் அமல்படுத்தியும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயரவில்லை. முதல்வர் ரிப்போர்ட்: அரசு பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக் குறையால் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை, இதனால், தேர்ச்சி சதவீதம் குறைந்ததாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். தற்போது 425 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. அரங்கேறும் கூத்து: முதல்வரின் கருத்து இப்படி இருக்க, பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையைவிட, அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும், மாணவர்களே இல்லாத பள்ளியில் ஆசிரியர்கள், ஊழியர்கள் பணிபுரியும் கூத்தும் புதுச்சேரியில் அரங்கேறி வருகிறது.
உதாரணமாக, கடந்த 2013ம் ஆண்டு, கனகசெட்டிகுளம் அரசு ஆரம்பப் பள்ளியில்எட்டு மாணவர்கள் படித்தனர். அங்கு பணியாற்றிய 2 ஆசிரியர், 2 ஊழியருக்கு ஆண்டிற்கு 10 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. என்ன செய்யலாம்? விரல் விட்டு எண்ணும் அளவில் உள்ள மாணவர்களுக்கு, பல ஆசிரியர்களை நியமித்து, அரசு பணத்தை சம்பளமாக வழங்கி விரயம் செய்யாமல், குறைவான மாணவர்கள் கொண்ட பள்ளிகளை அருகில் உள்ள அரசு பள்ளிகளுடன் இணைத்து விடலாம். அல்லது மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் செலவீனம் குறையும்.
காற்று வாங்கும் வகுப்பறைகள்:
அரசு ஆரம்பப் பள்ளிகளில், எல்.கே.ஜி. முதல் 5ம் வகுப்பு வரை உள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில், 9 மாணவர்கள் படித்த ஓடைவெளி அரசு ஆரம்பப் பள்ளியில் பணியாற்றிய 2 ஆசிரியர், 2 ஊழியருக்கு 10 லட்சத்து 29 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. காரைக்கால் கோட்டப்பாடி அரசு ஆரம்பப் பள்ளி அதைவிட ஒருபடி மேலே சென்று விட்டது. இப்பள்ளியில் மாணவர்களே இல்லை; ஆனால், பள்ளியில் பணியாற்றும் ஒரு ஆசிரியர், ஒரு ஊழியருக்கு 6 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.11 மாணவர்கள் மட்டும் உள்ள சின்ன வீராம்பட்டினம் அரசுஆரம்ப பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியர்கள், 2 ஊழியர்களுக்கு 10 லட்சத்து 27 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது.
இதேபோல், உத்தரவாகிணிபேட் பள்ளில் 10 மாணவர்கள், வடமங்கலம் 12, சூரமங்கலம் 10, நரிமேடு 13, கரசூர் 11, சிலுக்காரிப்பாளையம் 11, கைக்கிளைப்பட்டு ஆரம்பப் பள்ளியில் 14 மாணவர்கள் படிக்கின்றனர். காரைக்கால் மாவட்டத்தில் பச்சூர் ஆரம்பப்பள்ளியில் 5 மாணவர்கள், கொன்னக்காவேலி 7, கீழபருத்திகுடி ஆரம்பப் பள்ளியில் 8 மாணவர்கள் என பல பள்ளிகளில் விரல் விட்டு எண்ணும் அளவிலான மாணவர்கள் படிக்கின்றனர். மொத்தமுள்ள 161 ஆரம்பப்பள்ளியில், 60 பள்ளிகளில் 50க்கும் குறைவானமாணவர்களே உள்ளனர். குறிப்பாக, 11 பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர்.
இப்பள்ளிகளில் முதல் வகுப்பு, 2வது மற்றும் 3ம் வகுப்புகளில் 2, 3 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். கடந்த 2014-15ம் ஆண்டின் நிலைமை மோசமாக உள்ளது. ரோல் மாடலாக திகழ்வார்களா? அரசு பள்ளியில்பணியாற்றும் ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை மட்டும் தனியார் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தையும், அரசிடம் பெற்றுக்கொள்கின்றனர். சமுதாயத்திற்கு ரோல் மாடலாக திகழும் ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க முன்வர வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக