பிளஸ் டூ சிறப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு ஜூலை 23 (வியாழக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர்வி.சி.ராமேஸ்வர முருகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பிளஸ் டூ துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும், ஏற்கெனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களும் தொடக்கக்கல்வி பட்டயப் படிப்புக்கு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) விண்ணப்பிக்கும் வகையில் 2-வது கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ந் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கு 23-ம் தேதி முதல் 31-ந் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படும்.மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் (டயட்) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பத்தைப் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500 (எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250) விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை விண்ணப்பம் வாங்கிய மையத்தில் ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.ஆன்லைன் வழியிலான கலந்தாய்வு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஆகஸ்ட் 7-ந் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும்.
கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் தனியே அனுப்பப்பட மாட்டாது. எனவே, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கலந்தாய்வு விண்ணப்பம் ஒப்படைத்த மையத்தில் கலந்துகொள்ள வேண்டும்.இவ்வாறு ராமேஸ்வர முருகன் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக