லேபிள்கள்

22.7.15

ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு: பணியாற்றிய காலத்தை ஓராண்டாகக் குறைக்க வலியுறுத்தல்

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க ஒரே பள்ளியில் மூன்று ஆண்டுகள்
பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை ஓராண்டாகக் குறைக்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.இந்தக் கோரிக்கை தொடர்பாக 
பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதாவிடமும் அவர்கள் கோரிக்கைமனுவை வழங்கியுள்ளனர். 

இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வே.நடராசன், பொதுச்செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் வழங்கியுள்ள மனு விவரம்:-

ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க குறைந்தபட்சம் மூன்றாண்டுகள் அதே பள்ளியில் பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதியை ஓராண்டாகக் குறைக்க வேண்டும்.அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தில் வட்டாரவள மேற்பார்வையாளர்கள் பணியிடங்கள் கலைக்கப்பட்டதால், அங்கு பணியாற்றிய 380 பேர் வெளி மாவட்டங்களுக்கு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களாக நிர்வாக மாறுதல் செய்யப்பட்டனர். இவர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அரசாணையில் உரிய திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக