லேபிள்கள்

1.10.15

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

கடந்த மாதம்முதுகலை ஆசிரியர் பதவிஉயர்வுக்காக நடந்த கலந்தாய்வில்ஏராளமானபட்டதாரி ஆசிரியர்கள்பதவிஉயர்வை நிராகரித்ததால்,
928 இடங்கள்நிரம்பவில்லைஇதை நிரப்பமீண்டும் பதவிஉயர்வு கலந்தாய்வை நடத்தபுதியமுன்னுரிமை பட்டியலைகல்வித்துறைவெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதிமுதுகலைஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வுநடந்ததுஇதில் பங்கேற்ற பட்டதாரிஆசிரியர்கள் பலரும்எதிர்பார்த்த இடங்கள்கிடைக்காததால்பதவி உயர்வைநிராகரித்தனர்

இதனால், 928 முதுகலை ஆசிரியர்பணியிடங்கள் நிரம்பவில்லை.இந்த காலிஇடங்களை நிரப்பபதவி உயர்வுக்கு தகுதிவாய்ந்தோர் அடங்கியபுதிய முன்னுரிமைபட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது.கல்வித்துறை அலுவலர் ஒருவர்கூறியதாவது:பட்டதாரி ஆசிரியருக்கும்,முதுகலை ஆசிரியருக்கும் இடையேசலுகை,சம்பளத்தில் பெரிய வித்தியாசம் கிடையாது.பதவி உயர்வை ஏற்றால்வேறு ஊருக்குமாற்றலாக வேண்டுமே என பயந்துபதவிஉயர்வை வேண்டாம் என உதறிவிடுகின்றனர்.விரைவில் நடத்த உள்ள பதவிஉயர்வு கலந்தாய்விலும்அனைத்துஇடங்களும் நிரம்புமா என்பது சந்தேகம்தான்.இவ்வாறு அவர் கூறினார்.


பாட வாரியாக காலியிடங்கள் விவரம்

  • தமிழ் 100
  • ஆங்கிலம் 160
  • கணிதம் 80
  • இயற்பியல் 100
  • வேதியியல் 70 
  • தாவரவியல் 63
  • விலங்கியல் 70
  • வரலாறு 143
  • வணிகவியல் 73
  • பொருளியல் 69
  • மொத்தம் 928

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக