லேபிள்கள்

1.10.15

'நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு

கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும், தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 

இந்த தேர்வை, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., சார்பில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. கடந்த ஜூன், 28ம் தேதி, நாடு முழுவதும், 89 மையங்களில் நடந்த தேர்வில், ஏழு லட்சம் பேர் எழுதினர். இதற்கான முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக