லேபிள்கள்

4.12.15

அண்ணா பல்கலை. நுழைவுத் தேர்வு ரத்து

தொடர் மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்துள்ளது.நவம்பர் 28-ஆம் தேதிக்குப் பிறகு சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 

பல மாவட்டங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதோடு, பேருந்துகள், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து இயக்கமும் நிறுத்தப்பட்டுள்ளது.சென்னையைப் பொருத்தவரை மத்திய சென்னை, தென் சென்னை பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கியுள்ளன. பலர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இந்தப் பாதிப்புகளிலிருந்து தப்பவில்லை.


இதன் காரணமாக, டிசம்பர் 10-ஆம் தேதி வரை நடத்த இருந்த அனைத்துபருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.இப்போது பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.எஸ். ஆராய்ச்சி படிப்புகள் சேர்க்கைக்காக சனிக்கிழமை (டிச.5) நடைபெற இருந்த நுழைவுத் தேர்வும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் கூறினார்.இதற்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக