பிளஸ் 2வில், 14 பாடங்களுக்கான செய்முறை தேர்வை, பிப்., 5 முதல், 25க்குள் நடத்தி முடிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச், 4ல் துவங்குகிறது.
அதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. தேர்வு மையங்கள் அமைத்தல், தேர்வர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்தல், பொதுத் தேர்வு பணிகளுக்கு பயிற்சி வழங்குதல் போன்ற பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்நிலையில், செய்முறைத் தேர்வை எப்போது நடத்த வேண்டும் என, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அதன்படி, பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், நர்சிங், கம்ப்யூட்டர் சயின்ஸ், மைக்ரோ பயாலஜி, தொடர்பு ஆங்கிலம் உள்பட, 14 பாடங்களுக்கு, பிப்., 5 முதல், 25க்குள் செய்முறைத் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். தனித்தேர்வர்களுக்கு, பிப்.,23 முதல், 25க்குள், செய்முறை தேர்வை நடத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக