லேபிள்கள்

12.1.16

3 ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் நிம்மதி: தினமலர் செய்தி எதிரொலி

தமிழகத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பணி மூப்பு பட்டியல் தயாரிக்க, 'தினமலர் ' செய்தி எதிரொலியாக கல்வித்துறை
சார்பில், நேற்று திருத்தப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 3 பட்டதாரி ஆயிரம் ஆசிரியர்களை பட்டியலில் சேர்க்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


மாநில அளவில் 1.1.2016 அடிப்படையில் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கான பணி மூப்பு பட்டியல் தயாரிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு இயக்குனர் கண்ணப்பன் சில நாட்களுக்கு முன் உத்தரவிட்டார். இதில், 2002--2003 கல்வியாண்டில் நேரடி நியமனம் பெற்று 2002 ஜூலையில் பணியில் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூன்றாயிரம் பேரை பட்டியலில் சேர்க்க எவ்வித அறிவிப்பும் இல்லை.இதனால் பட்டியல் தயாரிப்பில் குழப்பம் ஏற்பட்டது.'தினமலர் ' செய்திஇதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.


இதன் எதிரொலியாக, பணிமூப்பு பட்டியல் தயாரிக்க திருத்தப்பட்ட உத்தரவை அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் நேற்று கல்வித்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.அந்த உத்தரவில் '31.12.2002 வரை (2002 ஜூலை உட்பட) நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இடை நிலையில் இருந்து பட்டதாரியாக பதவி உயர்வு பெற்றவர்கள், பிற துறை மற்றும் தொடக்க கல்வியில் இருந்து பள்ளிக்கல்விக்கு மாற்றமானவர் களையும் பட்டியலில் சேர்க்க வேண்டும். முந்தைய உத்தரவில் 2000--2001 என குறிப்பிட்டதை 2001--2002 என திருத்தம் செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக