லேபிள்கள்

29.2.16

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு நாளை துவக்கம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்ட பள்ளிகளில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை துவங்குகின்றன.

பிளஸ் 2 தேர்வு, நாளை துவங்கி, ஏப்., 22 வரை நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு நாளை துவங்கி, மார்ச், 28ல் முடிகிறது. நாடு முழுவதும், 16 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 25.67 லட்சம் பேர் இத்தேர்வுகளை எழுத உள்ளனர். பிளஸ் ௨வில், 10.67 லட்சம் பேரும்; 10ம் வகுப்பில்,
15 லட்சம் பேரும் பங்கேற்கின்றனர்.


தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி, மஹாராஷ்டிரா, அந்தமான் தீவு உள்ளிட்ட சென்னை மண்டலத்தில், 2,150 பள்ளிகளைச் சேர்ந்த, 1.62 லட்சம் பேர், 10ம் வகுப்பு தேர்வையும்; 57 ஆயிரம் பேர், பிளஸ் 2 தேர்வையும் எழுத உள்ளனர்.பிளஸ் 2வுக்கு, முதல் நாளில், ஆங்கிலத் தேர்வு நடக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, முதல் நாளில், 'டைனமிக் ரீடெய்ல்' மற்றும் இந்திய சுற்றுலா, பாதுகாப்பு, ஐ.டி., உள்ளிட்ட, 10 விருப்பப் பாடங்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடத் தேர்வுகள், மார்ச், 2ல் துவங்க உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக