'கேந்திரிய வித்யாலயா'க்களில் தினமும் தேசிய கொடி ஏற்ற உத்தரவு
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கேந்திரிய வித்யாலயா கூடுதல் ஆணையர் யு.என்.காவரே, மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்:
இந்திய தேசியக் கொடி, கவுரவம் மற்றும் சுதந்திரத்தின் சின்னமாக விளங்குகிறது. அதற்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டும். தேசியக் கொடியை பற்றி, அனைத்து தகவல்களையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே, கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தினமும் காலை தேசியக் கொடி ஏற்ற வேண்டும்; சூரிய அஸ்தமனத்துக்கு முன், கொடியை இறக்க வேண்டும். பள்ளி முதல்வர்கள், பள்ளியின் முக்கியமான பகுதியில், கொடிக் கம்பத்தை நிறுவ வேண்டும். காலையில் மாணவர்கள் கூடி, தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக