சித்தா, ஆயுர்வேதம் படிப்புகளுக்கு, 5,700 பேர் மட்டுமே விண்ணப்பித்து உள்ளனர். முந்தைய ஆண்டை விட, 2,400 விண்ணப்பங்கள் குறைந்துள்ளன. தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்களும்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கும்
அவகாசம், ஜூலை, 29ல் முடிந்தது. 5,702 பேர் விண்ணப்பித்துள்ளனர். முந்தைய கல்வியாண்டில், 8,100 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதைவிட, 2,400 விண்ணப்பங்கள் குறைந்துள்ளதால், சித்தா, ஆயுர்வேத படிப்புகளில் மாணவர்களுக்கு ஆர்வம் குறைந்து விட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக