லேபிள்கள்

6.10.16

உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்ததை எதிர்த்து ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் 'அப்பீல்'

சென்னை:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணை யை ரத்து செய்ததை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மாநில
தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. இதற்கிடையில், தி.மு.க.,தரப்பிலும், 'கேவியட்' மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

டிசம்பருக்குள் தேர்தல்

தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை விசாரித்த, உயர் நீதி மன்ற நீதிபதி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப் பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பாணை யை வெளியிட்டு, டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

இதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் நேற்று முறை யீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப் பட்டது. தி.மு.க., வழக்கறிஞர்களும், தேர்தல் ஆணையம் தரப்பில் முறையீடு செய்யப்படுகி றதா என்பதை கவனித்தனர். 

மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் பி.குமாரிடம் கேட்ட போது, ''மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்வதற்காக, பதிவுத் துறைக்கு வழக்கறிஞர்கள் சென்று உள்ளனர்; இன்று தாக்கல் ஆகிவிடும்,'' என்றார்.
அதன்படி, பதிவுத் துறையில் மேல்முறையீட்டு மனு தாக்கல்செய்யப்பட்டது; அதற்கு, வரிசை எண் தான்கொடுக்கப்பட்டது.
நாளை விசாரணை

பதிவுத்துறை, சில ஆவணங்களை கோரி இருப்பதால், மனுவுக்கான மேல்முறையீட்டு எண், நாளை கிடைக்கும் என, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

இம்மனுவை அவசர மாக விசாரிக்க கோரி,தலைமை நீதிபதி அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன் அல்லது இரண்டாவது, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நாளை முறையிட வாய்ப்புள்ளது. அதற்கு அனுமதி கிடைக்கும் பட்சத்தில், நாளையே மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடக்கக் கூடும்.
இதற்கிடையில், 'இந்த வழக்கில், எங்கள் தரப்பை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது' என, தி.மு.க., தரப்பில், 'கேவியட்' மனு தாக்கல் செய்திருப்பதாக, மூத்த வழக்கறிஞர் வில்சன் தெரிவித்தார்.
தேர்தல் பணிகள் தற்காலிக நிறுத்தம்
உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் பணிகளை நிறுத்தி வைக்குமாறு, கலெக்டர்கள் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தர விடப்பட்டு உள்ளது. 'மறு உத்தரவு வரும் வரை, தேர்தல் பணிகளை தொடர வேண்டாம்' என, மாநில தேர்தல் கமிஷனர், சீதாராமன் அறிவுறுத்தி உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக