உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை காரணமாக, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், அக்.,22ல் நடக்கும் தேர்வு தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லுாரிகளில் சீனியர் விரிவுரையாளர், விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் விரிவுரையாளர் என, 222 காலி பணியிடங்களுக்கு, அக்.,22ல் மதுரை உட்பட, ஒன்பது மாவட்டங்களில் டி.ஆர்.பி., சார்பில் தேர்வு நடக்கிறது. இதற்கு ,10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
அக்.,21 உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. அதற்காக பள்ளி, கல்லுாரிகளில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 21ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கை பல மையங்களில் மறுநாளும் நீடிக்க வாய்ப்புள்ளதாக கருதி, 22ல் நடக்கும் டி.ஆர்.பி., தேர்வுக்கான தேர்வு மையங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இத்தகவலால் தேர்வர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அக்., 21ல் உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை உள்ளது. அதற்கு அடுத்த நாள் நடக்கும் தேர்வுக்காக மையங்கள் ஒதுக்க சம்மந்தப்பட்ட, ஒன்பது மாவட்ட நிர்வாகங்களிடம் கல்வித்துறை சார்பில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதனால் இத்தேர்வு தொடர்பாக எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக