லேபிள்கள்

14.12.16

குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஏராளமானோர் தவிப்பு: டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்க கோரிக்கை

இணையதள சேவை பாதிப்பால் குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய 85 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை பிப்ரவரி 19ம் தேதி நடத்துகிறது. 



இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க  டிசம்பர் 12ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வர்தா புயல் தாக்க தொடங்கியது. இது, நேற்று முன்தினம் 3 மாவட்டங்களை துவம்சம்  செய்தது. இதனால் செல்போன் சேவை, இணையதள சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் முடங்கியது.

ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. அது மட்டுமின்றி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இணையதளம் சேவை துண்டிப்பால்  குரூப் 1 தேர்வுக்கு 2 நாட்கள் விண்ணப்பிக்க முடியாமல் போனது. ஆயிரக்கணக்கானவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேர்வுக்கு  விண்ணப்பிக்கும் தேதியை டிஎன்பிஎஸ்சி நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. ஆனால், டிஎன்பிஎஸ்சியில் இருந்து எந்தவித அறிவிப்பும் வராததால்  தேர்வர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக