லேபிள்கள்

14.12.16

பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் தவிப்பு!!!

மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரங்களில் புள்ளி, கமா வேறுபாட்டினால் கல்வித்துறை ஏற்படுத்தும் குளறுபடிகளால்,
பாடம் நடத்த முடியாமல் அரசு பள்ளி ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள், அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் எண்ணிக்கை, பாடப்புத்தகங்கள், பாடங்கள் சம்பந்தமான தகவல்கள், கல்வித்துறையின் செயல்பாடுகள், கல்வித்துறையிலுள்ள அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஆன்-லைன் மூலம் அறிந்துகொள்வதற்காக பள்ளி மேலாண்மை தகவல் மையம் என்ற இணையதளத்தை அரசு அறிமுகப்படுத்தியது. திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை கடந்த, 2012 ஆண்டில் துவக்கியது.

இதன் அடிப்படையில் மாணவர்களின் பெயர், புகைப்படம், பெற்றோர் பெயர், மாணவரின் ஜாதி, பள்ளியின் பெயர் உள்ளிட்டவற்றையும் ஆன் -லைனில் பதிவு செய்யப்பட்டு, மாணவர்களுக்கான &'ஸ்மார்ட் கார்ட்&' வழங்கும் பணிகளும் இதன் அடிப்படையில் துவங்கப்பட்டது. இதுவரை, பதிவுகள் மட்டுமே செய்யப்படுகிறதே தவிர, ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதுவும் இல்லை. இருப்பினும், அவசர கதியில், சுற்றறிக்கை அனுப்பி, மாணவர்களின் விவரங்களை அடிக்கடி கேட்பதால் ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் கவனம் செலுத்த முடியாமல் உள்ளனர்.

தற்போது இப்பணிகளில் கூடுதலான பிரச்னையும் கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களின் இ.எம்.ஐ.எஸ்., விவரப் பட்டியல் மற்றும் தேர்வுதுறைத்துக்கு அனுப்பப்படும் பெயர் பட்டியலையும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் அனுப்ப கல்வித்துறை பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பட்டியல் அனுப்பப்பட்ட பல பள்ளிகளுக்கு அவை திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. 

மாணவர்களின் பெயருக்கு பின்னால், புள்ளி வைக்கப்பட்டுள்ளதும், இடையில் கமா இருப்பதையும் காரணமாக கல்வித்துறை தெரிவித்துள்ளது. எனினும், தேர்வுத்துறைக்கான பட்டியலில் அவ்வாறே குறிப்பிட்டிருப்பதால், தலைமையாசிரியர்கள் குழப்பமடைந்தனர்.

கல்வித்துறை புள்ளிகள் இல்லாமல் பெயர்களை அனுப்பும் படியும், பெயர் பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடாதென தேர்வுத்துறை அறிவிப்பதாலும், செய்வதறியாது திண்டாடி வருகின்றனர் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள். இப்பிரச்னையால், பள்ளிகளின் செயல்பாடுகளைக்கூட கவனிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கல்வித்துறை ஏற்படும் இவ்வாறான குழப்பங்களால், பள்ளிகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக