லேபிள்கள்

3.1.17

பள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு

பத்தாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன. இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான,

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட, மத்திய அரசு சார்பில், 60 சதவீத நிதி வழங்கப்படுகிறது.அதன்படி, 540 கோடி ரூபாய் கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அதை பரிசீலித்த மத்திய அரசு, முதற்கட்டமாக, 89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதில், 550 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக