லேபிள்கள்

5.1.17

'தொடர் விடுமுறையை ஈடு செய்ய சனிக்கிழமையில் பள்ளிகள் இயங்கும்'

'புயல் மற்றும் ஜெ., மறைவு காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில், புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நான்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும்' என, கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'நடா' புயல் காரணமாக, டிசம்பர் 1, 2ம் தேதிகளும், தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததையடுத்து, 6ம் தேதியும், 'வர்தா' புயல் காரணமாக 12ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.


அந்த விடுமுறைகளை ஈடு செய்யும் வகையில், வரும் 21, 28ம் தேதி மற்றும் பிப்ரவரி மாதத்தில் 4 மற்றும் 11ம் தேதி ஆகிய நான்கு சனிக்கிழமைகளில், புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகள் இயங்கும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக