கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல்வர் ஜெயலலிதா மறைந்தார். இதையடுத்து 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. 7, 8ம் தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. அரையாண்டுத் தேர்வுகள் 23ம் தேதி முடிவுற்ற நிலையில் 24ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. முன்பு ஒத்திவைக்கப்பட்ட தேர்வில் தமிழ் முதல் தாள் தேர்வு இன்று நடக்கிறது. இரண்டாம் தாள் தேர்வு நாளை நடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக