ஜாக்டோ-ஜியோ ஊழியர்கள் மீதான நீதிமன்ற வழக்கில், ஐகோர்ட் மதுரை கிளையில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நேற்று ஆஜரானார். இவ்வழக்கில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை
அறிக்கையை, வரும் 30ம் தேதிக்குள் அரசுக்கு தாக்கல் செய்யவும், போராட்டம் நடத்திய அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 7ம்தேதி முதல் 15ம்தேதி வரை காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதற்கு தடை விதிக்கக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் வக்கீல் சேகரன் மனு செய்திருந்தார். அதன்படி ஐகோர்ட் கிளை போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
இதையும் மீறி வேலை நிறுத்தம் நடந்ததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் கடந்த 15ம் தேதி ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் ஆஜராகி விளக்கமளித்தனர். அப்போது, பணிக்கு திரும்பும்படியும், தலைமை செயலாளரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து கவனிக்க உத்தரவிடுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் ஆகியோர் நேற்று ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேரில் ஆஜராயினர்.
ஜாக்டோ-ஜியோ தரப்பில் மூத்த வக்கீல் என்.ஜி.பிரசாத் ஆஜராகி வாதாடும்போது, ‘புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்ய வல்லுனர்கள் குழுவும், 7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பான அலுவல் ஆய்வுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுக்களின் அறிக்கை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை’ என்றார். பிறகு அட்வகேட் ஜெனரல் விஜயநாராயணன் வாதாடியபோது, ‘‘7வது ஊதியக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை வரும் 30ம் தேதி சமர்ப்பிக்க உள்ளது. அதன்பேரில் ஊதியக்குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த சில மாதங்களில் முடிவு செய்யப்படும். வல்லுனர் குழு அறிக்கையை பொறுத்தவரை பல்வேறு தரப்பினரிடம் கருத்துக்களை கேட்க வேண்டியுள்ளது. எனவே அதற்காக கூடுதல் கால அவகாசம் தேவைப்படுகிறது’ என்றார்.
அப்போது மூத்த வக்கீல் என்.ஜி.பிரசாத் கூறும்போது, “எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறைந்தபட்ச ஊதியம் பெறும் அரசு ஊழியர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘‘வரும் 30ம் தேதிக்குள் 7வது ஓய்வூதிய குழு பரிந்துரை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பிறகு அந்த பரிந்துரையை அமல்படுத்துவது தொடர்பாகவும், இடைக்கால நிவாரணம் தொடர்பாகவும் முடிவு செய்யலாம்’’ என்றனர். ஜாக்டோ, ஜியோ தரப்பினர் இதை ஏற்க மறுத்து, ‘ஒவ்வொரு முறையும் அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதம் செய்து கொண்டே வருகின்றனர்’ என்று தெரிவித்தனர். இதையடுத்து அந்த பரிந்துரையை எப்போது தாக்கல் செய்வது என்பது குறித்து பேசி முடிவை பிற்பகலில் தெரிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தனர்.
பின்னர், பிற்பகலில் மீண்டும் விசாரணை நடந்தது. முடிவில் நீதிபதிகள், ‘‘7வது ஊதியக்குழு பரிந்துரை தொடர்பான அறிக்கையை செப்.30ம் தேதிக்குள் அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும். பரிந்துரையை நிறைவேற்றும் கால அவகாசம் தொடர்பாக அரசு அக்.13க்குள் தெரிவிக்க வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும்பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது. மேலும் போராட்ட நாட்களுக்கான ஊதியம் பிடித்தம் செய்யக்கூடாது. போராட்டத்தில் ஈடுபட்ட நாட்களை அரசு ஊழியர்கள் சனிக்கிழமைகளில் பணியாற்றி ஈடுசெய்ய வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, விசாரணையை அக்.23க்கு ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக