லேபிள்கள்

14.6.18

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முடிவு

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், மாணவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு, இன்று முடிகிறது.


இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.60 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு, 8ம் தேதி முதல், சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியுள்ளது. சென்னை உட்பட, 42 மையங்களில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதில், சென்னை தவிர, மற்ற மையங்களில், இன்றுடன் சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிகிறது. சென்னையில் மட்டும், 17ம் தேதி வரை, சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன.

இது குறித்து, இன்ஜி., மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு, இதுவரை வர இயலாதோர், அருகில் உள்ள உதவி மையத்தில், சான்றிதழ்களை இன்று சரிபார்த்து கொள்ளலாம். 

அதேபோல், சென்னை அண்ணா பல்கலையில் உள்ள உதவி மையத்தில், 17ம் தேதி சான்றிதழ்களை சரிபார்க்கலாம். வரும், 17ம் தேதிக்குள், சான்றிதழ்களை சரிபார்க்காதோர், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது. விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்தோர், சென்னை அண்ணா பல்கலை உதவி மையத்தில் மட்டுமே, சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக