லேபிள்கள்

14.6.18

பள்ளிக்கல்வி- பட்டாரி ஆசிரியர்கள் - உபரி ஆசிரியர் கணக்கீடு - சரிதானா?

  • 150 மாணவர்கள் வரை பயிலும் உயர்நிலைப் பள்ளிக்கு 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் போதும் என்ற கணக்கீட்டில் மற்ற ஆசிரியர் பணியிடங்கள் உபரி என அரசு அறிவித்துள்ளது.


உயர்நிலைப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை 5 வகுப்புகள்  உள்ளன.

ஒவ்வொரு வகுப்பிற்கும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என மொத்தம் 25 பாடங்கள் உள்ளன.

ஒரு ஆசிரியர் 4 பாடங்கள் வீதம் 28 பாடவேளைகள்  பாடம் நடத்துவார்.
தலைமையாசிரியர் ஒரு பாடத்திற்கு 7 பாடவேளைகள் பாடம் நடத்துவார்.

ஆக மொத்தம் 5 ஆசிரியர்களும், ஒரு தலைமையாசிரியரும் சேர்ந்து 21 பாடங்கள் நடத்துவர்.
மீதமுள்ள 4 பாடங்களுக்கான (4 x 7 = 28) பாடவேளைகளை மாணவர்களுக்கு யார் நடத்துவார்?

நகர்ப்புறங்களை விட்டு தொலைவில் உள்ள பெரும்பாலான கிராமப்பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் இல்லை.

மேலும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும் கிடையாது.

அலுவலகப் பணி செய்ய இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இல்லை.

கல்வி இணைச்செயல்பாடுகளைச் செய்யவோ, கல்விசார் செயல்பாடுகளி மாணவர்களை ஈடுபடுத்தவோ எவரும் இல்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக