லேபிள்கள்

3.7.18

நீட் தேர்வு: வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக வரும் 6-ல் பதிலளிக்க சிபிஎஸ்இக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது சிபிஎஸ்இ.,க்கு நீதிபதிகள்  கேள்விகளை எழுப்பி உள்ளனர். அவை

* நீட் வினாத்தாள் கேள்விகள் எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகிறது? 

* நீட் வினாத்தாள் எதன் அடிப்படையில், தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது.

* தமிழ் பயிலும் மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட ஆங்கில வார்த்தையை, தமிழில் மொழி மாற்றம் செய்யப்படும் போது, என்ன வார்த்தை என்று மாணவர்களுக்கு கற்று கொடுக்கபட்டுள்ளதா?

* கல்வி என்பது அனைவருக்கு சமமாக இருக்க வேண்டும்.

* சிபிஎஸ்இ-க்கு இணையாக, தமிழ் வழி பயிலும் மாணவர்களுக்கு படம் கற்பிக்கப்படுகிறதா?

மேலும், அனைத்து மாணவர்களுக்கும் சமமான போட்டி தேர்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுரை வழங்கி, வழக்கின் விசாரணையை ஜூலை 6 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக