லேபிள்கள்

12.12.13

விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சி வகுப்புகள், ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க அனுமதிக்க மறுக்கும் கல்வி அலுவலர்கள் – இயக்குநர் தலையிட ஆசிரியர்கள் கோரிக்கை

கடந்த ஆண்டு வரை விடுமுறை நாளான சனிக்கிழமைகளில்  நடைபெற்ற (SSA) குறுவளமைய பயிற்சி வகுப்புகள் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு வேலை நாட்களாக கருதப்பட்டன. (அதாவது 210 பள்ளி வேலை நாட்கள் 10 குறுவளமைய பயிற்சி வகுப்புகள் ஆக மொத்தம் 220 வேலை நாட்கள்.).

       ஆனால் இத்தகைய விடுமுறை நாட்களில்  குறுவளமைய பயிற்சிகளில் கலந்து கொள்ளும் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

      ஆனால் இந்த ஆண்டு முதல் விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் நடைபெறும் குறுவளமைய பயிற்சி வகுப்புகள் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வேலை நாட்களாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

     எனவே உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்று  விடுமுறை நாட்களில் கலந்து கொள்ளும் குறுவளமைய பயிற்சிகளுக்கு ஈடுசெய்யும் விடுப்பு வழங்க தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின்  ஆசிரியர்கள், பல ஒன்றியங்களில்  கல்வி அலுவலர்களிடம்  தொடர்ந்து கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.

       இதில் சில ஒன்றியங்களில் ½ நாளும் சில ஒன்றியங்களில் 1 நாளும் ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பல ஒன்றியங்களில் ஈடுசெய்யும் விடுப்பு எடுக்க கல்வி அலுவலர்கள் அனுமதி மறுக்கின்றனர்.


        தொடக்க கல்வி துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள் இத்தகைய மாறுபட்ட செயல்பாடுகளால் குழப்பம் அடைந்துள்ளனர். எனவே இயக்குனர் இவ்விசயத்தில் தலையிட்டு பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவது போன்று தொடக்கக்கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும்  விடுமுறை நாட்களில் நடைபெறும் குறுவளமைய பயிற்சி வகுப்புகளுக்கு ஒரு நாள் ஈடுசெய்யும் விடுப்பு அனுமதிக்க கோருகின்றனர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக