உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி
உயர்வு
பட்டியலில்,மொழி
ஆசிரிர்களை தற்காலிகமாக சேர்க்க சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி
உயர்வு
பட்டியல் தயாரிப்பில் மொழி
ஆசிரியர்களை சேர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டது.அரசாணை
181 ன்
படி
பி.எட்., பட்டம் பெற்றவர்கள் மட்டுமே தலைமையாசிரியர் பதவி
உயர்வு
பட்டியலில் இடம்
பெற
முடியும். பி.லிட்., பட்டம் பெற்று
மொழி
ஆசிரியர்களாக தெலுங்கு, தமிழாசிரியர்களை பதவி
உயர்வு
பட்டியலில் சேர்க்கமுடியாது. "மொழி ஆசிரியர்கள் பி.எட்., பட்டம் படித்த
ஆண்டில் இருந்து மட்டுமே பதவி
உயர்வு
பட்டியலில் கணக்கிடப்படும்,' என
பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.மொழியாசிரியர்கள் "பி.லிட்.,
பட்டம்
பெறும்
போது
மொழியில் புலவர்
பட்டம்பெற்றுள்ளோம்,இது
பி.எட்., பட்டத்திற்கு இணையானது. எங்களது பணி
நியமனம் செய்தநாளை கணக்கிட்டு பதவி
உயர்வுபட்டியலில் சேர்க்க வேண்டும்', என
தெரிவித்தனர். கோர்ட் தடை:
மொழி ஆசிரியர்கள், மற்றும் தமிழக தமிழாசிரியர்கள் கழகம் சார்பில் மொழி ஆசிரியர்கள் பணி நியமன நாளில் இருந்தே தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டியலில் சேர்க்ககோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமையாசிரியர்பதவி உயர்வு பட்டியலுக்கு தடைகோரி வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் தலைமையாசிரியர்பதவி உயர்வு வழங்க கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. தற்காலிகமாக சேர்க்க உத்தரவு: இந்தவழக்கினை விசாரித்த சென்னை ஐகோர்ட் நீதிபதி கிருபாகரன் 2013-14 ல் நடத்தவுள்ள தலைமையாசிரியர்பதவி உயர்வுக்கு, மொழி ஆசிரியர்களுக்கு தற்காலிமாக பதவி மூப்பு பட்டியலில் இடம் வழங்க வேண்டும்.
தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் அனுமதிக்க வேண்டும். பதவி உயர்வு வழங்கவேண்டும். இந்த வழக்கின் இறுதியில் வழங்கப்படும் தீர்ப்பின் அடிப்படையில் செயல்பட வேண்டும், எனஇடைக்கால உத்தரவு பிறப்பித்தார். தமிழாசிரியர் கழக மாநில துணை செயலாளர் இளங்கோவன் கூறியதாவது:மொழி ஆசிரியர்கள் தலைமையாசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள கோர்ட் இடைக்காலஉத்தரவு வழங்கியுள்ளது. இது மொழியாசிரியர்களுக்கு கிடைத்த வெற்றி, இந்த வழக்கின் இறுதி தீர்ப்பிலும்வெற்றி கிடைக்கும்,என தெரிவித்தார்.
இத் தீர்ப்பின் அடிப்படையில் ஏஇஓ ,தமிழாசிரியர் பட்டதாரி ஆசிரியர்கள் அடங்கிய புதிய முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று (14.12.13 ) பிற்பகல் உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக