மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: வருமான வரி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும், "பான் கார்டு'
நடைமுறையில், அடுத்த மாதம் முதல் மாற்றம் செய்யப்படவுள்ளது. கார்டுக்காக விண்ணப்பிக்கும்போது, முகவரி சான்று, அடையாள சான்று, பிறந்த தேதி ஆகியவற்றை உறுதி செய்வதற்காக, ஒரிஜினல் சான்றிதழ்களையும் அளிக்க வேண்டும். நகல்களுடன், இந்த ஒரிஜினல் சான்றிதழ்களை ஒப்பிட்டு உறுதி செய்த பின் தான், விண்ணப்பம் ஏற்கப்படும். ஆய்வு முடிந்ததும், உடனடியாக, ஒரிஜினல் சான்றிதழ்கள், விண்ணப்பதாரரிடம் திரும்ப அளிக்கப்படும். இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக