சிபிஎஸ்இ
பள்ளிக்கு, மேல்நிலை
கல்வியை மாநில
கல்வி திட்டத்தில்
நடத்த அனுமதி
வழங்க தனி
நீதிபதி பிறப்பித்த
உத்தரவை எதிர்த்து
கல்வித்துறை இயக்குனர்
தாக்கல் செய்த
மனுவை ஐகோர்ட்
கிளை தள்ளுபடி
செய்தது. சிவகாசி
ஸ்ருதி வித்யோதயா
பள்ளியில் சிபிஎஸ்இ
பாடத்திட்டத்தில் ஒன்று
முதல் 10 வகுப்புகள்
நடைபெறுகின்றன. இப்பள்ளியில்
மாநில அரசு
பாடத்திட்டத்தில் 11, 12ம்
வகுப்பு நடத்துவதற்கு
அனுமதி கேட்டு
பள்ளி நிர்வாகி
அரசுக்கு விண்ணப்பித்தார்.
அரசு அனுமதி
மறுத் ததால்
அவர் ஐகோர்ட்
கிளையில் வழக்கு
தொடர்ந்தார். அந்த
வழக்கை விசாரித்த
தனி நீதிபதி,
அடிப்படை வசதிகள்
இருந்தால் 11, 12ம்
வகுப்பை மாநில
அரசு பாடத்திட்டத்தில்
நடத்த அனுமதி
வழங்கலாம் என
உத்தரவிட்டார். இதை
எதிர்த்து, தமிழக
பள்ளிக்கல்வித்துறை சார்பில்,
ஐகோர்ட் கிளையில்
தாக்கல் செய்த
மேல்முறையீடு மனு:
பத்தாம் வகுப்பு
வரை ஒரு
பாடத்திட்டத்திலும், 11, 12 வகுப்புகள்
மற்றொரு பாடத்திட்டத்திலும்
நடத்துகின்றனர்.
பணம் சம்பாதிக்க
வேண் டும்
என்ற நோக்கத்தில்
இந்த நடவடிக்கையில்
பள்ளி நிர்வாகங்கள்
ஈடுபடுகின்றன என
அரசுக்கு பல்வேறு
புகார்கள் வந்தன.
இதையடுத்து தமிழக
அரசு 2001ல்
ஒரு அரசாணை
வெளியிட்டது. அதில்,
மேல்நிலை கல்வியை
தனியாக பிரித்து
(11, 12) மற்றொரு பாடத்திட்டத்தில்
நடத்துவதற்கு அனுமதி
வழங்கக்கூடாது. பத்தாம்
வகுப்பு வரை
ஒரு பாடத்
திட்டத்திலும், மேல்
நிலையில் மற்றொரு
பாடத்திட்டத்திட்டலும் படிப்பதால்
மாணவர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே, பள்ளிக்கு
மேல் நிலையில்
மாநில அரசு
பாடத்திட்டத்திற்கு அனுமதி
வழங்கவில்லை. எனவே,
தனி நீதிபதி
உத்தரவை ரத்து
செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில்
கூறப்பட்டிருந்தது. இந்த
மனுவை நீதிபதிகள்
சுதாகர், வேலுமணி
ஆகியோர் விசாரித்தனர்.
Ôமாநில அரசு
பாட திட்டத்திற்கு
அனுமதி வழங்குவது
தொடர்பாக தமிழக
அரசு பிறப்பித்த
அரசாணை சட்டவிரோதமானது.
எனவே, தனி
நீதிபதி பிறப்பித்த
உத்தரவு சரியானதே.
அதில் தலையிட
முடியாது. அரசின்
மேல்முறையீடு மனு
தள்ளுபடி செய்யப்படுகிறதுÕ
என நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக