லேபிள்கள்

24.1.14

14,844 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புமாறு நீதிமன்றம் தீர்ப்பு.

வரும் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள், அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 14,844 ஆசிரியர்
பணியிடங்களை நிரப்புமாறுமராட்டிய மாநில அரசை, மும்பை உயர்நீதிமன்றம்கேட்டுக் கொண்டுள்ளது.

தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆய்வுசெய்து, அதன்படி,அங்கே அதிக ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் வெளியானதையடுத்து, அந்தப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012ம் ஆண்டு மாநில அரசு தடைவிதித்தது.அளவுக்கு அதிகமாக உள்ள ஆசிரியர்களுக்கு சரியான பணி ஒதுக்கப்படவில்லை என்றால், இந்த தடை நீடிக்கும் என கடந்த 2012ல் மாநில அரசாங்கம் கொள்கை முடிவை எடுத்தது. இதை எதிர்த்து, மும்பை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கலானது. இதன்மூலம் மேற்கண்ட தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக