லேபிள்கள்

12.1.15

100 சதவீத தேர்ச்சிக்கு இலக்கு 10, பிளஸ்2 ஆசிரியர்களுக்கு இனி விடுமுறை கிடையாது : மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை எட்டும்நோக்கத்துடன் ஆண்டிறுதி தேர்வு முடியும் வரை ஆசிரியர்கள் விடுப்பின்றி பணியாற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வில் 100 சதவீததேர்ச்சி இலக்கை எட்ட கடந்த 3 ஆண்டுகளாக கல்வித்துறை சிறப்பு நடவடிக்கைளைமேற்கொண்டு வருகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும்மாணவர்களுக்கு பாடவேளை தவிர கூடுதலாக அவ்வப்போது சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இதன் பலனாக கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டிறுதி தேர்வில் தேர்ச்சி விகிதம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் எண்ணிக்கை மற்றும் பாடங்களில் சதம் எடுப்பவர்கள் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.இந்த ஆண்டும் 100 சதவீத தேர்ச்சி என்ற குறிக்கோளுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

இதன் பொருட்டு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விவரம் கணக்கிடப்பட்டுள்ளது. அரையாண்டுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு அடுத்து வரும் 2 மாதங்கள் சிறப்பு வகுப்புகள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், பொதுத்தேர்வு முடியும்வரை 10 மற்றும் பிளஸ்2 ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்குமாறு கல்வித்துறையால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். கடைசி திருப்புதல் தேர்வு மற்றும் செய்முறை பயிற்சி தேர்வுகளையும் கவனமுடன் சிறப்பாக நடத்துமாறு பணிக்கப்பட்டுள்ளனர்.இதேபோல் தனியார் பள்ளிகளிலும் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களுக்குசிறப்பு வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக