சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஞாயிற்றுக்கிழமை(அக்.25) தொடங்க
உள்ளது.அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி (பி.யு.எம்.எஸ்.), யோகா- இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்.), ஹோமியோபதி(பி.எச்.எம்.எஸ்.)ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 29 முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.
அரசு கல்லூரிகள்:
சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி, பாளையங்கோட்டை சித்த மருóத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி, சென்னை அரும்பாக்கம் யுனானி, யோகா- இந்திய மருத்துவக் கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி கல்லூரி என மொத்தம் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.இவை தவிர தனியார் நடத்தும் 21 சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்த இடங்கள்:
அரசு மருத்துவக் கல்லூரிகளைப் பொருத்தவரை சித்தா 150, ஆயுர்வேதம்50, யுனானி 20, யோகா- இயற்கை மருத்துவம் 60, ஹோமியோபதி 50 என மொத்தம் 330 இடங்கள் உள்ளன. இவை தவிர சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் சுமார் 850 இடங்கள் உள்ளன.இந்தப் படிப்புகளில் சேருவதற்கு 5,075 மாணவர்கள் விண்ணப்பித்துஇருந்தனர். தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 4,913 பேருக்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
உள்ளது.அக்டோபர் 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் சித்த மருத்துவம் (பி.எஸ்.எம்.எஸ்.), ஆயுர்வேதம் (பி.ஏ.எம்.எஸ்.), யுனானி (பி.யு.எம்.எஸ்.), யோகா- இயற்கை மருத்துவம் (பி.என்.ஒய்.எஸ்.), ஹோமியோபதி(பி.எச்.எம்.எஸ்.)ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் ஜூன் 29 முதல் ஜூலை 24-ஆம் தேதி வரை நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக