லேபிள்கள்

22.10.15

அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல்

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சாரவைக் கூட்டம் இன்று காலைதில்லியில் தொடங்கியது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.


இந்த கூடத்தில், தொழிற்சாலை ஊழியர்களுக்கான பண்டிகைகால போனஸை உயர்த்தவும், தொழில் புரிவதை எளிதாக்க வணிக நீதிமன்றம் அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதியசட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த புதிய சட்டதிருத்த மசோதாவில், போனஸ் உச்சவரம்பை ரூ. 3,500-லிருந்து ரூ. 7,000-ஆக உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.மேலும், ரூ. 10,000 வரை ஊதியம் பெறுவோருக்கு மட்டுமே போனஸ் என்ற நிலை இருந்தது. அதனை மாற்றி ரூ. 21,000 வரை ஊதியம் பெறுவோருக்கு போனஸ் வழங்க சட்டதிருத்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.குளிர்கால கூட்டத்தொடர் குறித்து, இன்று நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக