வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார்.
வேலுார் மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்தும் காணப்படுகின்றன.
கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து பல மாணவர்கள் காயமடைந்தனர். எனவே, பழுதடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடந்தது.வேலுார் மாவட்டத்தில், 743 பஞ்சாயத்துகளில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயன்பாட்டிற்கு இல்லாத, 151 பாழடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பள்ளி கட்டடங்களை இடிக்க, ஊரக வளர்ச்சி துறையினர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் நந்தகோபால், அரசின் அனுமதி பெற்று, பாழடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக