லேபிள்கள்

10.11.15

குரூப்-4 பதவிக்கான நேரடி நியமனம் நவ.16 முதல் கலந்தாய்வு

குரூப்-4 பதவிகளுக்கு நேரடி நியமனத்துக்கான முதல் கட்ட கலந்தாய்வு நவம்பர் 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்த உள்ளது.

இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:


இந்தப் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2014 டிசம்பர் 21 ஆம் தேித நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பணியாளர் தேர்வுக்கான முதல் கட்ட கலந்தாய்வு வருகிற 16 ஆம் தேதி முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க தகுதியானவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அழைப்புக் கடிதம் விரைவு அஞ்சல் மூலமும், மின்னஞ்சல், குருந்தகவல் மூலமும் தகுதியானவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கலந்தாய்வு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பது உறுதி கிடையாது. தகுதி, காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப தேர்வு நடைபெறும்.

கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக