லேபிள்கள்

12.11.15

'குரூப் - 2ஏ' தேர்வு: அவகாசம் நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின் செயலர் விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பு: குரூப் - 2ஏ பிரிவில், நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளில், காலியாகவுள்ள, 1,863 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து, அக்., 12லும், பின், 84 கூடுதல் பணியிடங்களுக்கு, அக்., 20லும் அறிவிப்பு வெளியானது. 'இத்தேர்வுக்கு, நவ., 11 வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்வுக்கு விண்ணப்பிக்க, 'ஆன்லைனில்' நிரந்தர பதிவு அவசியம் என்பதால், நிரந்தர பதிவு முடித்து, பதிவுக்கட்டணம் செலுத்திய பிறகே, தேர்வுக்கு தனியாக விண்ணப்பிக்க முடியும். எனவே, தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி, நவ., 18 வரையிலும், தேர்வு கட்டணம் செலுத்தும் கடைசி தேதி நவ., 20 வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, பழைய முறைப்படி நிரந்தர பதிவு செய்தோர், அவர்களின் பயனாளர் குறியீடு மற்றும், 'பாஸ்வேர்டு' பயன்படுத்தி, புதிய முறை நிரந்தர பதிவில், தங்களின் சுய விவர பக்கத்தை ஏற்படுத்திய பின், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இணைய வசதி இல்லாத விண்ணப்பதாரர்கள், தாலுகா அலுவலகங்களில் உள்ள, பொது இ - சேவை மையங்களில், நிரந்தர பதிவு செய்து, தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக